“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்

“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்
“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்
Published on

இருதரப்பு கைகலப்பு சண்டையை பாலியல் தொல்லை என அவதூறாக கூறிவிட்டதாக நடிகை ராணி மீது நடிகர் சண்முகராஜன் புகார் தெரிவித்துள்ளார்.

நடிகை ராணியுடன் ஏற்பட்ட பிரச்னை சமாதானத்தில் முடிந்து விட்டதாக நேற்று கூறிய சண்முகராஜன், இன்று அவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சின்னத்திரை நாடகத்தின் காட்சி ஒன்றில் என்னை நிஜமாகவே ராணி அடித்தார். நான் ஏன் இப்படி அடித்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கு இயக்குநர்தான் அடிக்கச் சொன்னதாக தெரிவித்தார். பின்னர் அவருடன் இரண்டு தினங்கள் ஒன்றாக நடிக்க மறுத்துவிட்டேன். பின்னர் ஜவுளிக்கடை ஒன்றில் இருவரும் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது ராணி என்னைப் பார்த்து கிண்டலாக சிரித்துவிட்டுச் சென்றார். நான் இத்தனை பிரச்னை செய்த பின்னர், இப்படி கிண்டலாக சிரிக்கிறீர்களே என்று கேட்டேன். ராணியுடன் அவரது கணவரும் இருந்தார். சிறிது நேரத்தில் இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. உடனே அவர் காவல்நிலையம் சென்று புகார் கொடுத்துவிட்டார். பின்னர் நானும், இயக்குநரும் காவல்நிலையம் சென்று 5 நிமிடங்கள் இருந்தோம். அதன்பின் நான் பெர்மிஷன் பெற்றுக்கொண்டு வந்து தயாரிப்பாளருக்காக காட்சிகளை நடித்துக்கொடுத்தேன். 

ஆனால் ராணி இந்தக் கைகலப்பு பிரச்னையை தான், பாலியல் தொல்லை என அபாண்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் நானும், எனது குடும்பத்தினரும் மன உளைச்சல் அடைந்துள்ளோம். இது தொடர்பாக நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். நடிகர் சங்கம் இருவரை விசாரிக்கட்டும். என் மீது தவறு என்றால் எனக்கு ரெட் கார்டு கொடுக்கட்டும். அவர் மீது தவறு என்றால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கட்டும். இதற்கு நடிகர் சங்கம் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com