‘பாம்பன்’ஆக மாறிய சரத்குமார்..!

‘பாம்பன்’ஆக மாறிய சரத்குமார்..!

‘பாம்பன்’ஆக மாறிய சரத்குமார்..!
Published on

சரத்குமார் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘பாம்பன்’ படத்தின் பாடல்கள் இன்று ரெக்கார்டிங் செய்யப்படுகின்றன.

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் ‘பாம்பன்’. எஸ்எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் ரெக்கார்டிங் இன்று துவங்குகிறது. இதனை நடிகர் சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெவித்துள்ளார். படத்திற்கு தேவா இசையமைக்கிறார். படத்தில் நடிக்கும் மற்றவர்கள் குறித்த விவரம் பின்னர் தெரியவரும்.

இதனிடையே ‘பாம்பன்’ படத்தின் போஸ்டர்களையும் சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சரத்குமார் மிகவும் வித்யாசமான கெட் அப்புகளில் காட்சியளிக்கிறார். இதனை சரத்குமார் ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com