நடிகர் ரஜினிகாந்த் சென்னை மற்றும் கங்க்ரா ஆகிய விமான நிலையங்களின் சேவையை பாராட்டியுள்ளதாக இந்திய விமானநிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
‘காலா’ மற்றும் ‘2.0’ படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் ’பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாஸூதின் சித்திக், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் படப்பிடிப்புகள் இந்தப் படத்தில் படப்பிடிப்புகள் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெற்றது. அத்துடன் படப்பிடிப்புகள் ஹிமாச்சல மலைப்பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை விமான நிலையம் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் கங்க்ரா விமான நிலையம் ஆகியவற்றை, ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக இந்திய விமானநிலைய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ட்விட்டில், சென்னை மற்றும் கங்க்ரா விமான நிலையங்களின் இயந்திர மற்றும் பணியாளர்களின் பணியை ரஜினி பாரட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் அந்த விமான நிலையங்கள் காண்பதற்கு நன்றாக இருப்பதாகவும், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உபசரிப்பும் நன்றாக இருப்பதாக ரஜினி பாராட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.