நடிகர் ராஜசேகர் விபத்தில் சிக்கியது எப்படி? காரில் மதுபாட்டில்களை கைப்பற்றிய போலீசார்!

நடிகர் ராஜசேகர் விபத்தில் சிக்கியது எப்படி? காரில் மதுபாட்டில்களை கைப்பற்றிய போலீசார்!
நடிகர் ராஜசேகர் விபத்தில் சிக்கியது எப்படி? காரில் மதுபாட்டில்களை கைப்பற்றிய   போலீசார்!
Published on

விபத்தில் சிக்கிய நடிகர் ராஜசேகரின் காரில் இருந்து மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

தமிழில், ’இதுதான்டா போலீஸ்’ உட்பட சில படங்களில் நடித்தவர் நடிகர் ராஜசேகர். தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் இவர், இப்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற ராஜசேகர், தனது பென்ஸ் காரில் நேற்று அதிகாலை ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

எட்டுவழி எக்ஸ்பிரஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த அவரது கார், பெட்டா கோல்கொண்டா என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டாக்டர் ராஜசேகர் படுகாயமடைந்தார். இதுபற்றி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் வேறொரு காரில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காரை சோதனை செய்தனர். அதில் இரண்டு வெளிநாட்டு வோட்கா பாட்டில்களும் ஒரு டம்ளரும் இருந்தன. மூன்று டயர்கள் வெடித்திருந்தன. இதனால் கார் வேகமாக வந்ததால்தான் விபத்துக்குள்ளானதாக
போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி ஷம்சாபாத் இன்ஸ்பெக்டர் ஆர்.வெங்கடேஷ் கூறும்போது, ‘கார் அதிக வேகமாக வந்ததால், கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது. காரின் ஏர்பேக் பெரும் விபத்தில் இருந்து ராஜசேகரை காப்பற்றியுள்ளது. நாங்கள் வருவதற்கு முன்பே அவர் சென்றுவிட்டதால், அவர் மதுபோதையில் இருந்தாரா என்பது பற்றிய ஆய்வுக்கு அவரை உட்படுத்த முடியவில்லை. ஒரு ஒயின் பாட்டிலும் காருக்குள் கிடந்தது’’ என்றார்.

ராஜசேகரின் மனைவி நடிகை ஜீவிதா கூறும்போது, ‘’விபத்தில் ராஜசேகருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்தைக் கண்டதும் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் நலமாக இருக்கிறார்’’ என்றார்.

காரை வேகமாக ஓட்டி வந்ததாக டாக்டர் ராஜசேகருக்கு எதிராக ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு வேகமாக காரை ஓட்டி, தொழிலதிபர் ஒருவரின் காரில் மோதிய சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

’’ராஜசேகர் இதுவரை ஏற்படுத்திய விபத்து மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை சேகரித்து வருகிறோம். இதையடுத்து அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆடிஓ-வுக்கு பரிந்துரைப்போம்’’ என்று ஷம்சாபாத் போலீசார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com