’பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்யும் ராகவா லாரன்ஸ்

’பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்யும் ராகவா லாரன்ஸ்
’பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்யும் ராகவா லாரன்ஸ்
Published on

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ படத்திற்காக ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக ’காஞ்சனா 3’ படம் வெளியானது. அதன்பிறகு, தற்போது ’அதிகாரம்’, ‘ருத்ரன்’,’துர்கா’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ’ருத்ரன்’ படத்தை ’பொல்லாதவன்’, ’ஆடுகளம்’, ’ஜிகர்தண்டா ’படங்களைத் தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கி இயக்குநராக அறிமுகமாகிறார்.

லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில், இப்படத்திற்காக, கடந்த 1962 ஆம் ஆண்டு வெளியான ‘வீரத்திருமகன்’ படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாடல் காட்சியின் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com