ஹேமா கமிட்டி | “அனைத்தும் மிக தீவிரமாக கையாளப்பட வேண்டும்” - பிரித்விராஜ் அளித்த அதிர்ச்சி தகவல்கள்!

ஹேமா கமிட்டி அளித்த ரிப்போர்ட் தொடர்பாக பல அதிர்ச்சி தரும் தகவல்களை பகிர்ந்துள்ளார் நடிகர் பிரித்விராஜ்.
பிரித்விராஜ்  - ஹேமா கமிட்டி
பிரித்விராஜ் - ஹேமா கமிட்டி முகநூல்
Published on

"வானம் முழுவதும், மின்னும் நட்சத்திரங்களில் அழகான நிலவுடன் சேர்த்து மர்மங்களும் நிறைந்திருக்கின்றன. ஆனால், அறிவியல் பூர்வமான விசாரணை மூலமே நட்சத்திரங்கள் மின்னுவதுமில்லை, நிலா அழகானதும் அல்ல என்று தெரியவரும்"

- இப்படிப்பட்ட வரிகளின் மூலம் மலையாள திரையுலகின் இருண்ட பக்கங்கள் குறித்து தெரிவித்திருந்தது நீதிபதி ஹேமா கமிட்டி.

ஹேமா கமிட்டி அறிக்கை, மலையாள திரையுலகில் செல்வாக்கு மிக்க நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டவர்களால் நடிகைகள் சந்திக்கும் பிரச்னைகளை குறிப்பிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு நடிகர் திலீப்பால் நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் இன்னும் விசாரணையிலேயே நீடிக்கிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நீதிபதி ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன் கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில்தான், மலையாள திரையுலகையே தற்போது பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது ஹேமா கமிட்டி அறிக்கை. பலர் தங்களின் கருத்துக்களையும், தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களையும் தொடர்ந்து முன்னிறுத்தி வரும் சூழலில், மலையாள திரையுலகின் மூத்த நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போன்றவர்கள் எந்தவொரு கருத்துக்களையும் தற்போது வரை தெரிவிக்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் என பல்வேறு பரிணாமங்களை எடுத்துள் பிரித்விராஜ் சுகுமாரன், அந்த அறிக்கை குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான அம்மா ‘The Association of Malayalam Movie Artistes (AMMA)’ சரியாக செயல்படவில்லை. இவ்விவகாரத்தில் AMMAவிடம் இருந்து வலுவான தலையீடு மற்றும் நடவடிக்கைகள் தேவை” என்று தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

அதில், “இந்த கமிட்டியின் மூலம் நடத்தப்படும் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீதும் நிச்சயம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதேபோல, தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஹேமா கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை அனைத்தும் மிக தீவிரமாக கையாளப்படவேண்டும்.

அதேநேரம் ஹேமா கமிட்டி எனக்கு எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அந்த கமிட்டி உருவாக குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரித்விராஜ்
நடிகர் பிரித்விராஜ்

மேலும், மலையாள திரைத்துறையில் ஒரு குறிப்பிட்ட செல்வாக்கு மிகுந்த குழுவினர் இருப்பதை சுட்டிக்காட்டிய இவர், “செல்வாக்கு மிக்க குழு என்று அழைக்கப்படுவோரிடம் இருந்து நான் எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளவில்லை என்பதால் அப்படியொரு பிரச்னையே இல்லை என்று அர்த்தமல்ல. நான் அதை அனுபவிக்கவில்லை. அவ்வளவே.

ஆனால், மலையாள சினிமாவில் யாரேனும் இப்படிப்பட்டவர்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். அப்படி பாதிக்கப்பட்டிருந்தால் அது அகற்றப்பட வேண்டும்.

எனது திரைப்படம் எடுக்கும் இடத்தில்மட்டும் பாதுகாப்பை உறுதி செய்வதால் எனது பொறுப்பு முடிந்துவிடாது. ஒட்டுமொத்தத் துறையிலும் பாதுகாப்பு என்பது இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரித்விராஜ்  - ஹேமா கமிட்டி
மகாராஷ்டிரா: மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து நொறுங்கியது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com