பிரசாந்த் To இர்ஃபான்... ‘தலைக்கவசம் உயிர்க்கவசம்!’ அழுத்தமாக சொல்லும் போக்குவரத்து காவல்துறை!

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பிரபல நடிகர் ஒருவர், தொடர்ந்து பேசி வருவது பேசுபொருளாகி இருக்கிறது. இதன் சுவாரஸ்யமான பின்னணி குறித்து பார்க்கலாம்.
நடிகர் பிரசாந்த்
நடிகர் பிரசாந்த்கோப்புப்படம்
Published on

கோவை, திருச்சி, மதுரை உள்பட தமிழ்நாடு முழுக்க போகும் இடமெல்லாம் ஹெல்மெட் பற்றி பேசி வருகிறார் நடிகர் பிரசாந்த். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, உருகி உருகி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். திரையுலக பிரபலம் ஒருவர், பொதுநல நோக்கில் விழிப்புணர்பு ஏற்படுத்துவது புதிதல்ல. வரவேற்கக் கூடிய விஷயமும் கூட. ஆனால் ட்விஸ்ட் என்னவென்றால், அவரே ஹெல்மெட் அணியாமல் பேட்டியளித்து சர்ச்சையொன்றில் சிக்கியிருக்கிறார்!

நடிகர் பிரசாந்த்
நடிகர் பிரசாந்த்புதிய தலைமுறை

'வைகாசி பொறந்தாச்சி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரசாந்த், தமிழ் மட்டுமின்றி, மலையாளம், இந்தி, தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 90' களில் தமிழ்த் திரையுலகை ஆட்சி செய்த பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர், ஆர்.கே.செல்வமணி, வசந்த், அகத்தியன், பவித்ரன் உள்ளிட்ட இயக்குநர்களின், கதையின் நாயகனாக ஜொலித்தவர். பரபரப்பான கதை சொல்லலுக்கு பேர் போன, இயக்குநர் ஹரி அறிமுகமான 'தமிழ்' திரைப்படத்திலும் பிரசாந்த்தான் நாயகன்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான பொன்னர் - சங்கர் திரைப்படத்திலும் இவர்தான், இரட்டை தோற்ற நாயகன். கல்லூரி வாசல் திரைப்படத்தில் அஜித்துடன் நடித்துள்ள பிரசாந்த், தளபதி விஜய்யுடன் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் பிரசாந்த்
"எங்க விஜய் அண்ணாவ என்னயா பண்ணி வச்சிருக்கீங்க?" - 'GOAT' பட கெட்டப்பிற்கு எழும் கடுமையான விமர்சனம்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அந்தகன்'. இதன் புரமோஷனுக்காக பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார் பிரசாந்த். அப்படி அவர் கொடுத்த பேட்டியில்தான் தொடங்கியது ஹெல்மெட் சர்ச்சை.

வித்தியாசமாக இருக்கட்டும் என்று நினைத்து, யூ டியூப் தொகுப்பாளினிக்கு பேட்டியளித்தபடியே இருசக்கர வாகனத்தில், சென்னை - தியாகராய நகர் வீதிகளை வலம் வந்தார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் வந்ததோ இல்லையோ, பாண்டி பஜார் போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்த செல்லான் வந்து சேர்ந்தது. அந்த தொகுப்பாளினிக்கும் அபராதம் விதித்திருந்தனர். வித்தியாசமான முறையில் பேட்டியளித்ததில் தவறில்லை.

நடிகர் பிரசாந்த்
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் இண்டர்வியூ.. நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதிப்பு!

இருசக்கர வாகனத்தை வீதியில் இயக்கினாலே ஹெல்மெட் அணிய வேண்டும், பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இந்த விதியை மீறியதே, பிரசாந்த் செய்த தவறு. தவறை ஒப்புக் கொண்ட நடிகர் பிரசாந்த், அபராதத்தை செலுத்தினார். இந்த விஷயம், அந்தகன் திரைப்பட வெளியீட்டை விட வைரலாகிவிட்டது.

செல்லும் இடமெல்லாம் இந்தக் கேள்விகளை எதிர்கொள்கிறார் பிரசாந்த். தாம் ஏற்கனவே ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்து வருவதாக, தன்னிலை விளக்கமும் கொடுக்கிறார்.

இதேபோல, ஹெல்மெட் சர்ச்சையில் சிக்கிய மற்றொரு பிரபலம் இர்ஃபான். யூ டியூபரான இவர், தனது இருசக்கர வாகனத்தை ஸ்டைலாக இயக்கிய வீடியோவை, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி, லைக்ஸ்களை அள்ளினார். "வியூஸ்"கள் அபாரமாக இருக்கும் என எண்ணிய அவருக்கு அபராத செல்லான்தான் கிடைத்தது.

வீடியோவில் அவர் இயக்கிய இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட்டும் இல்லை, இர்ஃபான் ஹெல்மெட் அணியவும் இல்லை. இதை ஒரு நெட்டிசன் சுட்டிக்காட்ட, இர்ஃபானுக்கும் அபராதம் விதித்தது சென்னை காவல்துறை.

ஹெல்மெட் அணியாததற்கு ஆயிரம் ரூபாய், நம்பர் பிளேட் இல்லாததற்கு 500 ரூபாய் என அபராதத்தை தீட்டிவிட்டது. பிரபல யூ டியூபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது பற்றி, தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்திலும் பதிவிட்டது சென்னை போக்குவரத்து காவல்துறை.

நடிகர் பிரசாந்த்
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இரண்டரை மணி நேரம் பதிலளித்த விஷால்!

அடுத்தடுத்த இந்த கவனிக்கத்தக்க அபராத விதிப்பின் மூலம், ‘தலைக்கவசம் உயிர்க்கவசம்’ என மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொல்லி வருகிறது சென்னை போக்குவரத்து காவல்துறை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com