ஆண்டாள் சர்ச்சை விவகாரத்தில் நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் நித்யானந்தா பக்தர்களை கடுமையாக சாடியுள்ளார்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதியுள்ள கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்து அமைப்புகள் பலவும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஆனால் தான் தவறான எண்ணத்தில் ஆண்டாள் குறித்து கூறவில்லை, தன்னுடைய கருத்து யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக வைரமுத்து கூறியிருந்தார். இருப்பினும், வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. குறிப்பாக நித்யானந்தாவின் பக்தர்கள் மிகவும் கடுமையான வார்த்தைகளால் வைரமுத்துவை திட்டி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நித்யானந்தாவின் பக்தர்களுக்கு எதிராக பிரசன்னா ட்வீட் செய்துள்ளார்.
அதில் “உண்மையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம்தான். அழித்தொழிக்கப்பட வேண்டிய இந்து எதிரி இக்கூட்டமே! சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே இவ்வர்ப்ப பதர்களை சுட்டெரித்துவிடு” என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.