படப்பிடிப்பில் விபத்து: மோகன்லால் மகன் காயம்

படப்பிடிப்பில் விபத்து: மோகன்லால் மகன் காயம்
படப்பிடிப்பில் விபத்து: மோகன்லால் மகன் காயம்
Published on

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் காயமடைந்தார்.

நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ். இவர் த்ரிஷ்யம் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். தமிழில் கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றினார். இவர், தமிழில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஜீத்து ஜோசப் இயக்கும் ’ஆதி’ என்ற மலையாளப் படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு கொச்சியில் நடந்து வந்தது. அப்போது பிரணவ்-க்கு காயம் ஏற்பட்டதாக கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிஜீத்து ஜோசப் கூறும்போது, ‘ஆக்‌ஷன் காட்சியை படமாக்கிய போது பிரணவ்-க்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. ரத்தம் வடிந்ததை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். காயம் பட்ட இடத்தில் தையல் போடப்பட்டுள்ளது. இப்போது நலமாக இருக்கிறார். மூன்று நாட்கள் டாக்டர்கள் ரெஸ்ட் எடுக்கக் கூறியுள்ளனர். இதை ரசிகர்கள் பெரிய விஷயமாக்கி விட்டனர்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com