'இரவின் நிழல்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் மைக்கை தூக்கி எறிந்ததற்கு மீண்டும் மன்னிப்பு கோரி உள்ளார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.
இயக்குநர் பார்த்திபனின் 'இரவின் நிழல்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த 2-ம் தேதி சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது. அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு, முதல் பாடலை வெளியிட்டுள்ளார். அவ்விழாவில் பார்த்திபனும் ஏ.ஆர்.ரகுமானும் உரையாடிய போது, பார்த்திபன் கையில் இருந்த மைக் வேலை செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன், கையில் இருந்த மைக்கை, தூக்கி மேடைக்கு கீழே எறிந்தார்.
இதனை கண்டு மேடையில் அமர்ந்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான் சற்று அதிர்ச்சி அடைந்தார். அதே மேடையிலேயே தான் எதற்காக கோபம் அடைந்தேன் என்பதை விளக்கமாக சொல்லிவிட்டு, தனது அநாகரீகமான செயலுக்கு வருத்தம் தெரிவித்து கொண்டார், பார்த்திபன். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முன்பாக மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் பெரும் புயலை கிளப்பியது. பார்த்திபனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பறந்தன. இந்த நிலையில், மீண்டும் மன்னிப்பு கோரி பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/IDpbgChF8EA" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
அந்த வீடியோவில் இந்த சம்பவம் தனக்குள் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், தனது கோபத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை என்றும் பாத்திபன் கூறியுள்ளார். மேலும் `தூக்கி எறிந்தது மைக் தான், ஆனால் உடைந்தது என்னவோ மனசுதான்’ என்று தனக்கான பாணியில் மன்னிப்பு கோரியுள்ளார் இயக்குநர் பார்த்திபன்.