பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகார்: எந்த தொடர்பும் இல்லை என வழக்கிலிருந்து நிவின்பாலி விடுவிப்பு!

நடிகர் நிவின் பாலி பட வாய்ப்பு வழங்குவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கொடுத்த புகாரிலிருந்து முழுவதுமாக நிவின்பாலி விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிவின் பாலி
நிவின் பாலிx
Published on

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு கேரள சினிமாத்துறையில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்தன. அந்த வகையில் நடிகர் நிவின்பாலி மீதும் பாலியல் குற்றச்சாட்டு புகாராக காவல் நிலையத்தில் பதியப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது.

நிவின் பாலி
உச்சம் பெறும் கேரள சினிமா பாலியல் குற்றச்சாட்டுகள்.. நடிகர் நிவின்பாலி மீது பாலியல் வழக்குப்பதிவு!

ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு..

நடிகர் நிவின்பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டின் படி, 2023-ம் ஆண்டு பட வாய்ப்பு வழங்குவதாக கூறி பெண் ஒருவரை துபாய்க்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதியப்பட்டது.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரில், “திரைப்படத்தில் தன்னை நடிக்க வைப்பதாக கூறி நடிகர் நிவின் பாலி துபாய்க்கு அழைத்து சென்று, 2023 நவம்பரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக எர்ணாகுளத்தில் பெண் புகார் அளித்திருந்தார்.

நிவின் பாலி
நிவின் பாலி

அதன்படி நிவின் பாலி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது, இந்த குற்றத்தில் நிவின்பாலி ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், ஜாமீனில் வெளிவர முடியாத படி நிவின்பாலி மீது வழக்கு பதியப்பட்டது.

இந்த பரபரப்பான குற்றச்சாட்டுக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய நிவின்பாலி, தன்மீதான குற்றம் அபாண்டமானது என்றும், போலியானது என்றும், அதனை தான் நிரூபிப்பேன் என்றும் பகிரங்கமாக அறிவித்தார்.

நிவின் பாலி
”என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை” - நடிகர் நிவின்பாலி விளக்கம்!

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிவின்பாலி..

நிவின்பாலி பாலியல் குற்றச்சாட்டை மறுத்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நாளில் நிவின்பாலி கொச்சியில் இருந்ததாகவும், விடுதியில் தங்கியிருந்ததற்கான ரசீதும் வெளியிடப்பட்டது. உடன் நிவின்பாலி மீதான குற்றச்சாட்டு குறித்து பேசியிருந்த இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன், அது ஒரு பொய்யான புகார் என்றும் குற்றஞ்சாட்டப்படும் நாளில் நிவின்பாலி தன்னுடன் இருந்ததாகவும் அறிவித்தார்.

நிவின் பாலி
நிவின் பாலி

இந்நிலையில் நிவின்பாலி மீதான பாலியல் வழக்கை விசாரித்த ஊன்னுக்கல் போலீசார், நிவின் பாலிக்கு இந்த குற்றத்தில் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவரை குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அறிக்கை சமர்பித்துள்ளனர். இந்த அறிக்கை கொத்தமங்கலம் ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் குற்றஞ்சாட்டிய வாக்குமூலத்தில் கூறியதை போல், சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் நிவின் இல்லை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவின் பாலி
நிவின் பாலிweb

போலீஸார் சமர்பித்திருக்கும் அறிக்கையில், "நாங்கள் அவரது எமிக்ரேசன் விவரங்கள், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் பிற பயண விவரங்களை ஆய்வு செய்தோம். அந்த விவரங்களின் படி அவர்மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தவில்லை, எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து அவரது பெயரை நீக்க முடிவு செய்தோம்" என்று சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) மூத்த அதிகாரி கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலியல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், தன்மீது நம்பிக்கை வைத்து தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நிவின்பாலி நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

நிவின் பாலி
‘அது ஒரு பொய் புகார்’- அன்றைய நாளில் அவர்என்னுடன் இருந்தார்.. நிவின்பாலிக்கு ஆதரவாக பேசிய இயக்குநர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com