''அன்பின் ஸ்பரிசம்'' - நகுலின் மனைவி ஸ்ருதி பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ!!

''அன்பின் ஸ்பரிசம்'' - நகுலின் மனைவி ஸ்ருதி பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ!!
''அன்பின் ஸ்பரிசம்'' - நகுலின் மனைவி ஸ்ருதி பகிர்ந்த நெகிழ்ச்சி வீடியோ!!
Published on

தங்களுடைய செல்ல நாய் பிஞ்சுக் குழந்தையின் கையை முதன்முதலாக தொட்டுப்பார்க்கும் வீடியோவை நகுலின் மனைவி ஸ்ருதி பகிர்ந்துள்ளார்.

பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நகுல் பின்னர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார். நகுலும் அவரது மனைவி ஸ்ருதியும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பார்கள்.

அவ்வப்போது பாடல் பாடுவது, உடற்பயிற்சி, செல்ல நாயின் சேட்டைகள் என நகுல்-ஸ்ருதி ஜோடி இன்ஸ்டாவில் பதிவிடுவார்கள். இவர்களுக்கு இன்ஸ்டாவில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சமீபத்தில் இந்த ஜோடிக்கு பெண் குழந்தையும் பிறந்தது. அது தொடர்பான புகைப்படத்தையும் இருவரும் இன்ஸ்டாவில் பகிர, பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்களுடைய செல்ல நாய் பிஞ்சுக் குழந்தையின் கையை முதன்முதலாக தொட்டுப்பார்க்கும் வீடியோவை நகுலின் மனைவி ஸ்ருதி பகிர்ந்துள்ளார்.

அது குறித்து நெகிழ்ச்சியை பதிவிட்டுள்ள அவர் இது எங்கள் இதயத்தை உருக செய்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் செல்ல நாய் , மெதுவாக நகர்ந்து பிஞ்சுக் குழந்தையின் கைகளை அவ்வளவு மென்மையாக தொடுகிறது. இது பார்ப்போரையும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. இந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள பலரும், குழந்தையை நாய் அவ்வளவு மிருதுவாக தொடுவதாகவும், இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com