'பாஜகவின் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரனுக்கு ஆதரவு!' - சர்ச்சையில் மோகன்லால்

'பாஜகவின் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரனுக்கு ஆதரவு!' - சர்ச்சையில் மோகன்லால்
'பாஜகவின் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரனுக்கு ஆதரவு!' - சர்ச்சையில் மோகன்லால்
Published on

'அடுத்த ஆண்டுகளில் கேரள சட்டப்பேரவையில் சிலர் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளிப்படுத்தியுள்ள பெயர்கள் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், வரவிருக்கும் தேர்தலில் வென்று சிலர் அடுத்த சட்டப்பேரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று சிலர் பெயரை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அதன்படி மூன்று வேட்பாளர்களை குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். அதில் பாஜகவின் பாலக்காடு வேட்பாளர் 'மெட்ரோமேன்' இ.ஸ்ரீதரனையும் சட்டப்பேரவையில் பார்க்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். மோகன்லால் இது தொடர்பாக பேசும் வீடியோவை ஸ்ரீதரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக்கூடிய ஒரு நபர் இங்கே இருக்கிறார். அவர்தான் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் சார். புயல் காரணமாக சேதமடைந்த பம்பன் பாலத்தை 46 நாள்களுக்குள் கட்டியவர் அவர். எல்லோரும் சாத்தியமற்றது என்று நினைத்த கொங்கன் ரயில்வே பணிகளை சுரங்கப்பாதைகள் அமைப்பதன் மூலம் அதை சாத்தியமாக்கிய தொலைநோக்கு பார்வையாளர் அவர்.

Thank you @Mohanlal for the kind gesture and good wishes. Your contribution to the film is highly commendable. Together we can build a new Kerala. #KeralaWithModi
#PuthiyaKeralam pic.twitter.com/4004KYPjXo
— Metroman E Sreedharan (@TheMetromanS) April 2, 2021

கொச்சி மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்கு தலைமை தாங்கிய நபரும் கூட. திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் திட்டங்களை முடித்த பின்னர் மீதமுள்ள நிதியை அரசாங்கத்திற்கு திருப்பித் தரும் ஒரு சுத்தமான நபர். மக்களை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல ஸ்ரீதரன் சாரின் சேவை இன்னும் தேவை" என்று கூறியதுடன், ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீதரன் வெல்வதற்கு வாழ்த்துக்கள் கூறினார்.

தமிழகத்தைப் போல கேரளாவில் பாஜகவுக்கு கடுமையான எதிர்ப்புகள் உள்ளன. ஆனால், மோகன்லால் பாஜக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஸ்ரீதரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஆனால், மோகன்லால் இந்த தேர்தலில் ஸ்ரீதரனுக்கு மட்டும் ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிடவில்லை. ஸ்ரீதரனை போலவே காங்கிரஸ் வேட்பாளர் ஒருவருக்கும், கம்யூனிஸ்ட் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவாக பேசியிருக்கிறார்.

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கொல்லம் சவரா தொகுதியில் போட்டியிடும் யுடிஎஃப் வேட்பாளர் ஷிபு பேபி ஜான், கொல்லமில் உள்ள பதனபுரத்தில் இருந்து எல்.டி.எஃப் (இடது ஜனநாயக முன்னணிக்கு) போட்டியிடும் எம்.எல்.ஏ கே.பி. கணேஷ் குமார் ஆகியோருக்கும் மோகன்லால் ஆதரவு தெரிவித்து பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com