சிவகார்த்திகேயன் உடன் மோதும் கவின்.. ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் நடிகர் கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கவின், கிங்ஸ்லி, நெல்சன்
கவின், கிங்ஸ்லி, நெல்சன்pt web
Published on

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை தொடர்நந்து நடிகர் ரஜினிகாந்த நடப்பில் வெளியான ஜெயிலர் படம் மூலமாக மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார், பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். 'FILAMENT PICTURES'' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இவரின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாகும் முதல் படமாக நெல்சனின் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிக்கும் ‘ப்ளடி பெக்கர் (Bloody Beggar) உருவாகியுள்ளது.

தொலைக்காட்சித் தொடர்களின் வழியாக சினிமாவில் நடிகராக கால் பதித்த நடிகர் கவினுக்கு, கடந்தாண்டு வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய பிரேக் பாய்ண்டாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து வெளியான ஸ்டார் திரைப்படமும் வரவேற்பை பெற்ற நிலையில், அவருடைய அடுத்த திரைப்படமாக ‘ப்ளடி பெக்கர்’ உருவாகியுள்ளது.

சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில், நெல்சனின் ஸ்டைலில் முழுக்க முழுக்க டார்க் காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கவின், கிங்ஸ்லி, நெல்சன்
“அந்த கெட்டப் பின்னாடி நெல்சனுக்கு தேவைப்படும்” - கலகலப்பில் மிரட்டிய கவினின் ’Bloody Beggar’ Promo!

சிவகாத்திகேயன் உடன் போட்டியிடும் கவின்..

படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கும் படக்குழு, ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ப்ளடி பெக்கர்
ப்ளடி பெக்கர்

ஏற்கனவே தீபாவளியன்று நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அமரன் திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், நடிகர் கவினின் திரைப்படமும் தீபாவளி ரேஸில் இணைந்துள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் பிரதர் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், மூன்று படங்களும் மோதிக்கொள்கின்றன. இதில் அஜித்தின் விடாமுயற்சியின் ரிலீஸ் தேதியும் தீபாவளியாக இருக்கும் பட்சத்தில் இந்தமோதல் இன்னும் சூடுபிடிக்கும் சூழலை எட்டியுள்ளது.

கவின், கிங்ஸ்லி, நெல்சன்
’குத்தி குத்தி கிழிச்சாங்க; இன்னும் அழுதிட்டே இருக்கன்’-ஆயிரத்தில் ஒருவன் குறித்து செல்வராகவன் வேதனை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com