“இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள்..” - மோடி கருத்துக்கு ஜீவா ஆதரவு  

“இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள்..” - மோடி கருத்துக்கு ஜீவா ஆதரவு  
“இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள்..” - மோடி கருத்துக்கு ஜீவா ஆதரவு  
Published on
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று அனைவரும்  இன்று நம் ஒற்றுமையை வெளிப்படுத்துவோம் என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர். 
இதனிடையே நேற்று முன் தினம் வீடியோ வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, இந்தியாவின் ஊரடங்கு அனைத்து நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றும் இந்த ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில், 5-ஆம் தேதி அதாவது இன்று இரவு 9 மணியிலிருந்து 9:09 வரை அனைவரும் மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறி இருந்தார். 
இந்நிலையில் பிரதமரின் வேண்டுகோளை ஆதரித்தது, நடிகர் ஜீவா அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.  அதில், “எல்லோருக்கும் வணக்கம். உலகையே அச்சுறுத்தி வரக்கூடி இந்தக் கொரோனா கொடிய வைரசை எல்லோரும் ஒற்றுமையாக இருந்து விரட்டி அடிப்போம். ஆகவே அனைவருக்கும் நம்பிக்கை தருவதற்காக எல்லோரும் தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நாம் கரவொலி எழுப்பிக் காட்டிய அதே ஒற்றுமையை இன்றும் காட்டுவோம்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு மீண்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 50 வயது முதியவர் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி கொரோனா தொற்றுக்கு உள்ளானதாகக் கூறி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த இவர் இன்று காலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com