செல்வராகவன் - தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
ஜவஹர் மித்ரனின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ’மாறன்’ படங்களில் நடித்து வரும் தனுஷ் செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்கவிருப்பதாய் அறிவித்திருந்தார். இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. படப்பிடிப்பும் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்குவதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், ‘மாறன்’, ‘திருச்சிற்றம்பலம்’ படங்களில் தனுஷும், ‘பீஸ்ட்’, சாணிக்காயிதம் படங்களில் செல்வராகவனும் நடித்து வந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இந்த நிலையில், இன்று ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
பூஜையில், தனுஷ் அப்பா கஸ்தூரிராஜா, அவரது மனைவி, தயாரிப்பாளர் தானு, தனுஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.