நடிகர் பரத் - வாணி போஜன் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் பரத் நடிப்பில் நேற்று ‘நடுவன்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.அதேசமயம், இன்று பரத் நடித்துள்ள பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி டில்லி பாபு தயாரித்துள்ளார். சூப்பர் ஹிட் அடித்த ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ படங்களை டில்லி பாபுதான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளது. அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்கியுள்ளார். “ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் பரபர திரில்லர் வகைப்படமாக இப்படம் இருக்கும்” என்று தயாரிப்பாளர் டில்லி பாபு தெரிவித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.