சீறி பறக்கும் ஹெலிகாப்டர்.. - அஜித் குறித்து நடிகர் அஸ்வின் பகிர்ந்த வீடியோ!!

சீறி பறக்கும் ஹெலிகாப்டர்.. - அஜித் குறித்து நடிகர் அஸ்வின் பகிர்ந்த வீடியோ!!
சீறி பறக்கும் ஹெலிகாப்டர்.. - அஜித் குறித்து நடிகர் அஸ்வின் பகிர்ந்த வீடியோ!!
Published on

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பிரியாணி, மேகா போன்ற படங்களில் நடித்தவர் அஸ்வின். இவர் மங்காத்தா, வேதாளம் போன்ற படங்களிலும் அஜித்துடன் நடித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் வீடியோ ஒன்றை அஸ்வின் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தன்னுடைய ட்ரோனையும், ரிமோட் ஹெலிகாப்டரையும் அஜித் இயக்கும் அந்த வீடியோதான் தற்போது வைரல். இது குறித்து பதிவிட்டுள்ள அஸ்வின், சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித் சார் மற்றும் அரவிந்த் சார் (தீனா படத்தில் ஒளிப்பதிவாளர்) ஆகியோரின் ஏரோமாடலிங்கை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இது எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா மட்டுமின்றி ஏரோமாடலிங், துப்பாக்கிச்சுடுதல் போன்ற தனக்கு பிடித்தமான பல வேலைகளில் அஜித் ஈடுபட்டு வருவார். அவர் இணைந்து பணியாற்றிய தக்‌ஷா குழுவின் ட்ரோன் தற்போது கொரோனா தடுப்புப் பணிக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com