‘என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும்..’ மீண்டும் கார் பந்தயத்தில் அஜித்! நீ வேற லெவல் தல!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், துபாயில் கார் பந்தயம் நடைபெற உள்ளது. அதில் உலக அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் பந்தய வீரர்களுடன் நடிகர் அஜித்குமார் களமாட இருக்கிறார். இதற்கு முன்பு இவர் கலந்து கொண்ட கார் பந்தயங்கள் குறித்து பார்க்கலாம்....
அஜித்
அஜித்முகநூல்
Published on

செய்தியாளர்: ராம் பிரசாத்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், துபாயில் கார் பந்தயம் நடைபெற உள்ளது. அதில் உலக அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் பந்தய வீரர்களுடன் நடிகர் அஜித்குமார் களமாட இருக்கிறார். இத்தருணத்தில், இதற்கு முன்பு இவர் கலந்து கொண்ட கார் பந்தயங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்...

MECHANIC TO ICONIC

- என்ற வார்த்தையை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம்.

அப்படிப்பட்ட வார்த்தைக்கு சொந்தகாரர்தான் நடிகர் அஜித்குமார். அமராவதியில் தொடங்கிய இவரது திரைப்பயணம், தற்போது குட் பேட் அக்லியாய் உருவெடுத்துள்ளது. சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் நடிகரான அஜித், இன்று கோடான கோடி இளைஞர்களின் ஹீரோவாக வலம் வருகிறார். ஒரு பக்கம் சினிமாவில் நடித்து கொண்டு இருந்தாலும், பைக் மற்றும் கார்கள் மீது அதிக பிரியம் கொண்டராகவே இருந்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் செலவிடும் நேரத்தை தவிர்த்து, பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சென்னை, மும்பை மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் நடைபெறும் கார் பந்தயங்களில் போட்டியிட்டார். அதே போல் FIA சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற ஒரு சில இந்தியர்களில் இவரும் ஒருவர்.

அஜித்
20 ஆண்டு சட்டப் போராட்டம்... 50 கோடி ரூபாய் சொத்தை மீட்ட நடிகர் கவுண்டமணி!

சாம்பின்யன்

இதையடுத்து 2003ஆம் ஆண்டு நடந்த FORMULA MARUTI INDIAN சாம்பின்யன்ஷிப் போட்டியில் நான்காவது இடத்தை பிறகு, FORMULA BMW ASIA சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, பனிரெண்டாவது இடத்தைப் பிடித்து வெற்றிகரமாக முடித்தார். ஆறு வருட ஓய்வுக்கு பிறகு 2010ஆம் ஆண்டு FORMULA 2 சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார்.

ajith car race
ajith car race

பின்பு அதே ஆண்டு சென்னையில் நடந்த MRF RACING SERIES-ல் இறுதிப் போட்டி வரை சென்றார். இதையடுத்து பந்தயத்தின் போது விபத்தில் சிக்கிய நிலையில், அவருக்கு முதுகு தண்டில் சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ரேசிங்கை விட்டு தொடர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார். பல ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும், ரேசிங் மீது உள்ள காதலால் பைக் மூலம் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல தொடங்கினார்.

வீனஸ் மோட்டார்

பயணம் செல்வதற்காகவே வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். பயணங்களின் மீது ஆர்வம் உள்ளோரை, உலகின் பல பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்வதே இந்நிறுவனத்தின் நோக்கம். சமீபத்தில் இந்த நிறுவனம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்லி- டேவிட்சன் ரைடு மூலம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.

மீண்டும் கார் பந்தயத்தில் தல..

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரது மனைவி ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் அவர் பங்கேற்கவுள்ளதாகவும், அதற்காக அஜித் தனி அணி ஒன்றை உருவாக்கியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் FORMULA BMW ASIA, BRISTISH FORMULA 3 மற்றும் FIA F2 உள்ளிட்ட கார் பந்தயங்களில் கலந்து கொள்வார் என்ற அறிவிப்பை வெளியிட்டு, ”உனக்கு பிடித்ததை மீண்டும் செய்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றும் பதிவிட்டுள்ளார். துயரங்கள் கோர்த்த தோல்விகள் பல துரத்தினாலும், அதில் சற்றும் துவண்டு விடாமல் தனது இலக்கை நோக்கிய துல்லியமான பயணத்தின் மூலம் பல வெற்றிகளைத் தனதாக்கியுள்ளார் அஜித்குமார்.

அஜித்
உலக சாதனை புத்தகத்தில் இடம்.. நடிகர் அஜித்தின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனம் சாதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com