சமூக வலைதளங்களில் நடிகர் அஜித் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் தன்னுடைய மகள் படிக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு சிலர் அஜித்தை தனது போனில் வீடியோ எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, வீடியோ எடுக்க முயன்றவர்களிடம் அஜித் குணமாக எடுத்துச் சொல்லியுள்ளார். செல்போனில் எடுக்கப்பட்ட அந்த சில நொடிகள் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், “ஸ்கூல்ல எடுக்க கூடாது, தப்பா எடுக்கக் கூடாது. இன்னொருநாள் எடுத்துக்கலாம். நான் சொல்லி அனுப்புற அப்ப வந்து எடுத்துக்கலாம். தம்பி அந்த கேமிராவை ஆப் செய்யுங்கள். இல்லைனா வள்ளி மேடமிடம் சொல்லிவிடுவேன். தப்பா எடுத்துக்காதீங்க” என்று அஜித் பேசுவது போல் உள்ளது. அதேபோல், சாப்பிட்டிங்களா என்றும் அஜித் அங்கு வேலை செய்பவர்களிடம் கேட்டுள்ளார். அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து அஜித் தன்மையாக எடுத்துச் சொன்னதை பாராட்டியுள்ளனர்.