நடிகர் விஜய் படப்பிடிப்பில் விபத்து : எலெக்ட்ரீஷியன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விஜய் படப்பிடிப்பில் விபத்து : எலெக்ட்ரீஷியன் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விஜய் படப்பிடிப்பில் விபத்து : எலெக்ட்ரீஷியன் மருத்துவமனையில் அனுமதி
Published on

நடிகர் விஜய் படப்பிடிப்பில் போக்கஸ் லைட் தவறி கீழே விழுந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

‘சர்கார்’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. அட்லி-விஜய் இருவரும் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். வசூல் ரீதியாக இரண்டு படங்களும் வெற்றியை பெற்றன.

விஜயின் 63வது திரைப்படமான இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகள்
மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின்
பிரத்யேக காட்சிகளின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமான ஃபுட்பால் அரங்கம் ஒன்றை படக்குழு அமைத்து வருகிறது. 

இந்நிலையில் சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடிகர் விஜய் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது 100 அடிக்கு மேல் அமைக்கப்பட்டுருந்த போக்கஸ் லைட் தவறி கீழே நின்று கொண்டு இருந்த எலெக்ட்ரீஷியன் செல்வராஜ் மீது விழுந்தது. 

இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com