கடத்தப்பட்ட கின்னஸ் சாதனை இயக்குனர் இன்று மீட்பு

கடத்தப்பட்ட கின்னஸ் சாதனை இயக்குனர் இன்று மீட்பு
கடத்தப்பட்ட கின்னஸ் சாதனை இயக்குனர் இன்று மீட்பு
Published on

கேரளாவில் கடத்தப்பட்ட இளம் திரைப்பட இயக்குனர் இன்று காலை மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கேரள மாநிலம், திருச்சூர் அடுத்த பேராமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நிஷாத் ஹசன். இவர் ’விப்லவம் ஜெயக்கானுள் ளதானு’ என்ற மலையாள படத்தை இயக்கியுள்ளார். இந்த 2 மணி நேரப் படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார். இந்தப் படம் கடந்த 2 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தின் தயாரிப்பாளருக்கும், நிஷாத் ஹசனுக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை தனது காரில் மனைவி பிரதீக்‌ஷாவுடன் குருவாயூர் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார் நிஷாத். பின்னால் வேகமாக வந்த காருக்கு வழிவிடுவதற்காக காரை மெதுவாக ஓட்டினார். அப்போது அவர் காரை முந்தி சென்று வழிமறித்தது அந்த கார். அதில் இருந்து இறங்கியவர்கள் நிஷாத்தைச் சமாரியாகத் தாக்கினர். தடுக்க முயன்ற பிரதீக்‌ஷாவையும் அடித்து உதைத்துவிட்டு, அவர்களது காரில் நிஷாத்தை கடத்திச் சென்றனர்.


 
பலத்த காயம் அடைந்த பிரதீக்‌ஷா, பெரமங்கலம் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் செய்தார். பின்னர் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வழக்குப் பதிவு செய்த போலீசார் நிஷாத்தை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் இன்று காலை கொடக்கராவில் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கும்பல் தாக்குதலில் காயமடைந்துள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் எதற்காக கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com