மைக்கை வீசிய பார்த்திபன்; அதிர்ச்சியான ஏ.ஆர்.ஆர்... `இரவின் நிழல்’ விழாவில் என்ன நடந்தது?

மைக்கை வீசிய பார்த்திபன்; அதிர்ச்சியான ஏ.ஆர்.ஆர்... `இரவின் நிழல்’ விழாவில் என்ன நடந்தது?
மைக்கை வீசிய பார்த்திபன்; அதிர்ச்சியான ஏ.ஆர்.ஆர்... `இரவின் நிழல்’ விழாவில் என்ன நடந்தது?
Published on

`இரவின் நிழல்’ திரைப்படத்துக்கான இயக்குநர் பார்த்திபனின் 'இரவின் நிழல்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் நேற்று நடைபெற்றது. இதில், படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு, முதல் பாடலை வெளியிட்டார். நிகழ்வின்போது பார்த்திபனின் மைக் சரியாக வேலை செய்யாததால் அவர் வேகமாக அதை வீசியெரிந்ததால் நிகழ்வில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ்ச்சியின்போது பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “பார்த்திபனின் இரவில் நிழல் திரைப்படம் மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடி இருக்கும்.தமிழ் திரைக்கலைஞர்களிடம் பல திறமைகள் உள்ளன. நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்” என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் பேசுகையில், அவருடைய மைக் தொழில்நுட்பக் கோளாறால் வேலை செய்யாமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன், வேகமாக இருக்கையிலிருந்து எழுந்து சென்று அந்த மைக்கை வீசி எறிந்தார். இதை எதிர்பார்க்காத ஏ.ஆர்.ரஹ்மான், சம்பவத்தை சுதாரிக்க சில நிமிடங்கள் ஆனது. இதனால் அதிர்சியடைந்த அவர், சற்று சுதாரித்து நிதானித்தார். அதற்குள் பார்த்திபனும் வேறொரு மைக் பெற்று பேசத்தொடங்கினார்.

இத்திரைப்படம் 96 நிமிடங்கள் கொண்டு ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்த்து ஆஸ்கர் விருது பெற்ற 3 பேர் பணியாற்றி உள்ளனர். பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, இயக்குநர்கள் சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகி ஷோபனா சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com