“நம் திரைத்துறைகளை உலகம் அறிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது” - ஏ.ஆர்.ரஹ்மான்

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி தொடக்கம் குறித்து பேசுகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் “வானவில்லில் உள்ள பல வண்ணங்களை போல் இந்தியாவில் பல கலாச்சாரங்கள், மொழிகள் உள்ளன” என்றுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, வரும் 12ஆம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “இந்தி திரையுலகம் மட்டுமே இந்தியாவில் உள்ளதென உலகம் நம்புகிறது. ஆனால் இந்தியாவின் மற்ற மொழிகளிலும் அபாரமான திறமைசாலிகள் இருக்கின்றனர்.

AR Rahman - நாட்டு நாட்டு பாடல்
AR Rahman - நாட்டு நாட்டு பாடல்Twitter

வானவில்லில் உள்ள பல வண்ணங்களை போல இந்தியாவில் பல கலாச்சாரங்கள், மொழிகள் உள்ளன. இங்குள்ள நம் திரைத்துறைகளை உலகம் அறிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல், இந்தியாவில் இருக்கும் பன்முகத்தன்மை திறன்களின் முன்னோட்டம்” எனக்கூறி இந்தியாவின் சிறப்புகளை பேசியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com