நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் கல்கி 2898 ஏடி. இதில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்தனர். இப்படம் வெளியான 15 நாட்களில் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டியது என படக்குழு தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது கல்கி திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதன்படி, “இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் படத்தில் இருக்கிறது” எனக்கூறி பிரபாஸ், அமிதாப் பச்சன், இயக்குநர் நாக் அஸ்வின் உள்ளிட்டோருக்கு கல்கிதாம் மடாதிபதியான ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
கல்கி அவதாரம் பற்றி புராணங்களில் சொல்லப்பட்டு இருப்பதற்கு முரணாக படம் இருப்பதாகவும், இது தவறானது என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது.