தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு|விருதுகளை அள்ளிய ’பொன்னியன்செல்வன் 1’ - சிறந்த நடிகை நித்யா மேனன்
ஆண்டுதோறும் மத்திய அரசு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 70வது தேசிய திரைப்பட விருது இன்று (ஆக.16) அறிவிக்கப்பட்டது. அதில் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, இயக்குநர் மணிரத்னம் இயக்கிய, ‘பொன்னியின்செல்வன் 1’ படம் தமிழில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தவிர, இப்படம் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதையும் (ஆனந்த் கிஷ்ணமூர்த்தி) பெற்றுள்ளது.
அடுத்து சிறந்த கன்னடப் படமாக ’KGF 2’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுபோல், சிறந்த நடிகையாக நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்ததற்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த நடிகருக்கான விருதுக்கு, நடிகர் ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், ‘காந்தாரா’ படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: தாய்லாந்து: அடுத்த பிரதமர் வேட்பாளர் தேர்வு... யார் இந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா?
சிறந்த தமிழ்ப் படம்: பொன்னியின்செல்வன் 1
சிறந்த கன்னடப் படம்: KGF 2
சிறந்த நடனத்திற்கான விருது: ’திருச்சிற்றம்பலம்’ - மேகம் கருக்காதா ஜானி - சதீஷ்
சிறந்த பின்னணி இசை: ஏ.ஆர்.ரஹ்மான் - பொன்னியின்செல்வன் 1
சிறந்த படத்தொகுப்பு: ஆட்டம்
சிறந்த ஒலி வடிவமைப்பு: பொன்னியின்செல்வன் 1 - ஆனந்த் கிஷ்ணமூர்த்தி
சிறந்த நடிகை: நித்யா மேனன் - திருச்சிற்றம்பலம்
சிறந்த நடிகர்: ரிஷப் ஷெட்டி - காந்தாரா
இதையும் படிக்க: 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி.. இன்று அறிவிப்பு வெளியாகிறது!