தேசிய விருதுகள் அறிவிப்பு: தமிழுக்கு எத்தனை விருது? முழு விவரம்

தேசிய விருதுகள் அறிவிப்பு: தமிழுக்கு எத்தனை விருது? முழு விவரம்
தேசிய விருதுகள் அறிவிப்பு: தமிழுக்கு எத்தனை விருது? முழு விவரம்
Published on

சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் அக்‌ஷய்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. இயக்குனர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறிவித்தது. இதில் சிறந்த நடிகராக அக்‌ஷய் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஷ்டம் என்ற இந்தி படத்தில் நடித்ததற்காக, அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. சிறந்த நடிகையாக சுரபி லட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மலையாளத்தில் வெளியான மின்னாமினுக்கு என்ற படத்தில் நடித்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு மொத்தம் ஆறு விருதுகள் கிடைத்துள்ளன.

மற்ற விருது விவரம் வருமாறு:

சிறந்த படம்: கசவ் (மராத்தி)

சிறப்பு ஜூரி விருது: மோகன்லால்

சிறந்த இயக்குனர்: ராஜேஷ் (வென்டிலேட்டர்)

ஒளிப்பதிவு: திரு (24)

துணை நடிகை: ஷாய்ரா வாசிம் (தங்கல்)

துணை நடிகர்: மனோஜ் ஜோஷி (தக்‌ஷ்கிரியா)

பாடகி: இமான் சக்கரபர்த்தி.

பாடகர்: சுந்தரா ஐயர் (ஜோக்கர்)

பாடலாசிரியர்கள்: வைரமுத்து (எந்த பக்கம், தர்மதுரை) அனுபம் ராய் (பெங்காலி)

சமூக பிரச்னையை பேசும்படம்: பிங்க்

குழந்தைகள் படம்: தனக்.

சண்டை இயக்குனர்: பீட்டர் ஹெயின் (புலி முருகன்)

நடன இயக்கம்: ராஜூ சுந்தரம் (ஜனதா காரேஜ்)

திரைக்கதை : ஷியாம் புஷ்கரன் (மகேஷின்டே பிரதிகாரம்)

தழுவல் திரைக்கதை : சஞ்சய் கிஷ்ணாஜி படேல் (தஷாகிரியா)

தயாரிப்பு வடிவமைப்பு: 24

எடிட்டிங்: ரமேஷ்வர் (வென்டிலேட்டர்)

சிறந்த மேக்கப் மேன் : ராமகிருஷ்ணா

இசை: பாபு பத்மநாபா (கன்னட லாமா).

அறிமுக இயக்குனர்: தீப் சவுதாரி (அலிஃபா)

ஸ்பெஷல் எபெக்ட்ஸ்: நவின் பால்(ஷிவாய்)

சிறந்த மலையாள படம்: மகேஷிண்டே பிரதிகாரம்.

தெலுங்கு படம்: பெல்லி சுப்லு

சிறந்த சினிமா விமர்சகர் விருது: ஜி.தனஞ்செயன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com