இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை! தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம்

இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Lingusamy
Lingusamypt desk
Published on

கடந்த 2014-ல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிப்பதற்காக, பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக பங்குதாரர் என்ற முறையில் இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ்சந்திர போஸ் ஆகியோர் கடனாக பெற்றுள்ளனர்.

பின் அந்த கடனுக்காக லிங்குசாமி கொடுத்த ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை, வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22 ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

Court order
Court orderFreepik

சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com