திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா ஒன்றுக்கு வரவிருந்த நடிகர் விவேக், கொரோனா நோய்த்தொற்று குறைந்த பின்பு வெகுவிமரிசையாக மரக்கன்று நடும் விழாவை நடத்துவோம் என நடிகர் விவேக் தெரிவித்திருந்தார்.
திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா ஒன்றுக்கு வரவிருந்தார் நடிகர் விவேக். ஆனால், கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பரவி வரும் சூழ்நிலையால் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் தற்போதைக்கு வர இயலாது என்பதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தெரிவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதில் கொரோனா நோய்த்தொற்று குறைந்த பின்பு வெகுவிமரிசையாக மரக்கன்று நடும் விழாவை நடத்துவோம் என நடிகர் விவேக் தெரிவித்திருந்தார். விழாவில் கலந்து கொண்டு வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று நினைத்திருந்த நடிகர் விவேக்கின் கடைசி ஆசை நிறைவேறாமலேயே போனது.