பாக்யராஜ் காதலுக்கு வயது 34

பாக்யராஜ் காதலுக்கு வயது 34
பாக்யராஜ் காதலுக்கு வயது 34
Published on

இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜின் காதலுக்கு இன்றோடு 34 வயதாகிறது.

இந்திய அளவில் ஸ்கிரின் ப்ளே எழுதுவதில் திறமையானவர் என திரை ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இயக்குநர் பாக்யராஜ். இவரது படங்களான ‘இன்றுபோய் நாளை வா’,‘மெளன கீதங்கள்’,‘பாமா ருக்மணி’ போன்ற படங்களில் நடித்த பிரவீணா என்பவரை முதலில் இவர் மணந்தார். சில வருடங்களிலேயே அவர் உடல்நலக் குறைவால் இறந்து போக நடிகை பூர்ணிமா ஜெயராமனை காதலித்து பின் மணந்தார். இந்த ஜோடிக்கு 1984 ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு சரண்யா, சாந்தணு என இரு வாரிசுகள் உண்டு. 

இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து இன்றோடு 34 ஆண்டுகள் ஆகின்றன. அதற்காக தன் வாழ்த்தினை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தணு.  அதில், “34 ஆண்டுகளாக இவர்கள் ரொமான்ஸில் கலந்துள்ளனர். அம்மா, அப்பாவுக்கு என் அன்பான திருமண நாள் வாழ்த்துகள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் ஆசிர்வாதமும் நிலைக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com