‘பிகில்’ படத்திற்காக நடிகர் விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
‘பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையை தொடங்கியது. அதேபோல், படம் தயாரிக்க கடன் கொடுத்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் சம்மன் கொடுத்து விசாரணையை தொடங்கினர் வருமான வரித்துறையினர். பின்னர் அங்கிருந்து அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து, இரவு முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இன்றும் சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ‘பிகில்’ படத்திற்காக நடிகர் விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதாவிடம் வாக்குமூலம் பெறக்கூடிய பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.