நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த வருடம் அதிக படங்களில் நடித்துள்ளார். அவர் ஏழு படங்களில் நடித்திருக்கிறார்
சினிமாவில், ஹீரோயின்கள் அதிகமானப் படங்களில் நடிப்பது கடினம். சில ஹீரோயின்கள் மட்டுமே அதிக வாய்ப்புகளைப் பெறுகின்றனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய ஹீரோயின்கள் அறிமுகமாவதால் ஹீரோயின்களுக்கான போட்டி அதிகம்.
இந்நிலையில் இந்த வருடம் கீர்த்தி சுரேஷ், அதிக படங்களில் நடித்துள்ளார். அவர் ஏழு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள படங்கள்: அக்னியாதவாசி (தெலுங்கு), தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், சீமராஜா (கெஸ்ட் ரோல்).
இவரை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி, சாமி ஸ்கொயர், வட சென்னை, செக்க சிவந்த வானம், கனா ஆகிய ஐந்து படங்களில் நடித்துள்ளார்.
நடிகை வரலட்சுமியும் ஐந்து படங்களில் நடித்துள்ளார். அவர், ’மிஸ்டர் சந்திரமவுலி’, ’எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’, சர்கார், சண்டக்கோழி 2, மாரி 2 படங்களில் நடித்திருக்கிறார்.
முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா, சமந்தா ஆகியோர் இந்த வருடம் குறைவான படங்களிலேயே நடித்துள்ளனர்.