லியோ திரைப்படத்தை பொறுத்தவரையில் படம் தொடங்கப்படும்போதே பல சுவாரசியங்களோடு தான் தொடங்கியது. விஜயின் முதல் படம் பேன் இந்தியா படமாக வெளியாகிறது. விஜய் மற்றும் த்ரிஷா 15 வருடங்களுக்கு பிறகு இணைகின்றனர். முந்தைய விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை போன்று இல்லாமல் LEO தன்னுடைய முழு படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தது, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜூன், மன்சூர் அலிகான் போன்ற மாஸ் நடிகர்கள் இணைந்தது என தொடக்கமே சரவெடியாகவே தொடங்கியது.
இந்நிலையில் தற்போது டிரெய்லரை வெளியிட்டிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இதுவரை பார்க்காத புதிய அவதாரத்தில் விஜய் அண்ணாவை பார்க்கபோகிறோம்” என பதிவிட்டுள்ளார். இவ்வளவு எமோசனலாக லோகேஷ் கனகராஜ் பதிவிட்டிருப்பது படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை தெளிவுபடுத்துகிறது. டிரெய்லரும் அதற்கேற்றார் போல் புதுமையான களத்துடன், மேக்கிங், விஎஃப்எக்ஸ், சிஜிஐ என அனைத்துமே பக்காவாக ரெடியாகி ஒரு விருந்தாக படக்குழு தந்துள்ளது. ட்ரெய்லரிலேயே விஷூவல் சிறப்பாக இருப்பதற்கு காரணம் அதை கையில் எடுத்திருப்பது மூவிங் பிக்சர் நிறுவனமாகும்.
லியோ திரைப்படத்திற்கான விஷுவல் எஃபெக்ட்களை மூவிங் பிக்சர் நிறுவனம் கையாள்கிறது. இது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களான பிளேட் ரன்னர் 2049 மற்றும் 1917 முதலிய திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளது. மேலும் தெலுங்குவில் வெளிவந்து பேன் இந்தியா படமாக வசூலை வாரிக்குவித்த RRR மற்றும் பாலிவுட் ஹாரர்-காமெடி படமான பெடியாவுக்குப் பிறகு இந்த ஸ்டுடியோ பணியாற்றும் 3வது இந்திய திரப்படம் லியோவாகும்.
அக்டோபர் 5-ம் தேதி வெளியான LEO ட்ரெய்லர் அனைத்து தரப்பினர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் கவனிக்கும் படியாக பார்த்தால் மூன்று தாஸ் கேரக்டர்களை விட வேறெந்த கதாபாத்திரத்தையும் தெளிவாக படக்குழு வெளிப்படுத்தவில்லை. ஒரு ஃபிளாட் ஸ்டோரியாக ரிவீல் செய்யப்பட்டுள்ள டிரெய்லரில், இரண்டு கேரக்டர்கள் யாருப்பா இவங்க என்பது போல் இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்று டான்ஸ் மாஸ்டர் சேண்டி மற்றும் மற்றொன்று 20 வயதான மலையாள நடிகர் மேத்யூ தாமஸ்.
யாரு அந்த ரத்தம் படிந்த முகத்தோட வில்லத்தனமான கண்ணோட வரது நம்ம டான்ஸ் மாஸ்டர் சேண்டியா? என்று ஆச்சரியப்படும் வகையில் இருக்கிறது அவருடைய காட்சி. உடல் எடையை குறைத்து சிக்ஸ்பேக்லாம் வச்சி எதுக்கோ ரெடியாகுறாருனு பார்த்தா, மனுசன் கொல மாஸ்ஸா லியோ படத்துக்கு தான் ரெடியாகி இருக்கார் போல. சிவந்த கண்களோடு, கொடூரமான சிரிப்போடு, பார்க்கவே பயங்கரமாய், மிரட்டும் தோரணையில் இருக்கும் இவர் தான், டிரெய்லரில் விஜய் சொல்லும் “ஒரு சீரியல் கில்லர் பார்க்குற எல்லாரையும் கொன்னுட்டே வரான், பார்க்க கொடூரமா இரக்கமில்லாதவனா இருக்கான்” என்ற வசனத்திற்கு சொந்தக்காரராக இருக்கவேண்டும். மேலும் சாண்டி தான் தளபதி விஜயுடன் மோதப்போகும் முதல் வெறித்தனமான வில்லனாகவும் இருக்க போகிறார்.
அமைதியான வாழ்க்கையை வாழும் விஜயை மீண்டும் பழைய கொடுரமான உலகத்திற்குள் இழுத்து வரும் கேரக்டராகவும் சாண்டியின் கேரக்டர் தான் அமையப்போகிறது. சினிமா வாழ்க்கையில் நிச்சயம் சாண்டியின் இந்த கேரக்டர் முக்கியமான இடத்தை பெறப்போகிறது எனத் தெரிகிறது. எப்படி மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு வில்லத்தன கேரக்டரில் சிறுவயது விஜய்சேதுபதியாக மகேந்திரன் நின்றாரோ, அப்படி சாண்டியின் இந்த கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் நிற்கப்போகிறது.
விஜயின் முகபாவனையோட இருக்க ஒருத்தர தேடி கண்டுபிடிச்சிருக்காங்க. மலையாளத்தில் அவருடைய முதல் காதல் திரைப்படத்தின் மூலம் முத்திரை பெற்றவரான மேத்யூ தாமஸ், லியோ படத்தில் விஜயின் மகனாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
டிரெய்லரை பொறுத்தவரையில் மகளை தோளில் சாய்த்துக்கொண்டு விஜய் அமர்ந்திருக்கும் காட்சியும், த்ரிஷா-விஜயுடன் மகள் மட்டுமே இருக்கும் காட்சியுமே இடம்பெற்றிருக்கிறது. ஒருவேளை மகனின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு டிரெய்லரில் ரிவீல் செய்யப்படாமல் இருக்கலாம். டிரெய்லரில் விஜய் சொல்லும் “உன் கைல துப்பாக்கி கிடைச்சா என்ன பண்ணுவ” வசனம் கூட மகனிடம் சொல்லும் வசனமாக இருக்கலாம். மகனாக வரும் மேத்யூ தாமஸ் இடம்பெறும் காட்சிகள் தியேட்டரில் அதகளப்படுத்தவிருக்கின்றன.
எப்படி விக்ரம் திரைப்படத்தில் லோகேஷ் வைத்த சிறு சிறு கதாபாத்திரங்களின் டிவிஸ்ட்டுகள் தியேட்டரில் அதிகளவு கொண்டாடப்பட்டதோ, அதுபோல் லியோவிலும் மேத்யூ தாமஸ் இடம்பெறும் ஆக்சன் காட்சியும் கொண்டாடப்பட வாய்ப்பு இருக்கிறது. இல்லையேல் மேத்யூ தாமஸ் விஜயின் பால்ய கதாபாத்திரமாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ஒரு பிரேமில் த்ரிஷா இல்லாமல் மகளுடன் விஜய் மட்டும் இடம்பெறும் காட்சியிருப்பதால், த்ரிஷா கதாபாத்திரத்திற்கு என்ன ஆகியிருக்கும் என்று சந்தேகிக்க தோன்றுகிறது. ஏனெனில் அட்லி தன்னுடைய படங்களில் பெண் கதாபாத்திரங்களை பலி கொடுத்துவிடுகிறார். கௌதம் மேனனும் தன்னுடைய நிறைய படங்களில் ஹீரோயின்ஸை பலி கொடுத்துவிடுகிறார். லோகேஷும் விக்ரமில் காயத்ரி கேரக்டரை பலி கொடுத்தார்.
இப்படி முன்னணி இயக்குநர்கள் தங்களது திரைப்படங்களில் கதாநாயகிகளை கொன்றுவிடுகின்றனர் என்பதால், ஏன் பா லோகி இதுலையும் த்ரிஷா கதை காலியா என நினைக்க தோன்றுகிறது.
எப்படியிருப்பினும் இந்த இரண்டு சிறுவர்கள் காதாபாத்திரமும் நிச்சயம் லியோ திரைப்படத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கின்றன.