ராட்சசன் படக் கதையை முதலில் 17 ஹீரோக்களும் 22 தயாரிப்பாளர்களும் நிராகரித்ததாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆங்கில நாளிதழ்க்கு பேட்டியளித்த விஷ்ணு விஷால் "ராட்சசன் படத்தின் கதையை 17 ஹீரோக்கள் மற்றும் 22 தயாரிப்பாளர்கள் நிராகரித்து அதற்குப் பிறகு தான் தன்னிடம் வந்தது. ஒரு கட்டத்தில் ராட்சசன் படம் தன் கையை விட்டு போனது பின்பு மீண்டும் தன்னைத் தேடி வந்தது. ராட்சசன் படத்தின் இயக்குநர் ராம்குமாரின் முந்தையப் படமான முண்டாசுப்பட்டியும் பல ஹீரோக்கள் நிராகரித்தப் பின்னரே தான் அதை தேர்ந்தெடுத்து நடித்தேன்" என்றார்.
ஓடிடி தளம் குறித்துப் பேசிய விஷ்ணு விஷால் " தமிழ் சினிமாவில் ஓடிடி மிகவும் பிரபலம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் இதில் கவனம் செலுத்தவில்லை. பின்பு மக்களும் தியேட்டர்களுக்கு சென்று பெரிய கொண்டாட்டத்துடன் படத்தை பார்ப்பதற்கு தான் விரும்புகிறார்கள் . அதனால் தான் OTT தளங்களில் அதிகம் யாரும் கவனம் செலுத்துவதில்லை" தெரிவித்துள்ளார்.