விஜய் சேதுபதி படத்துக்காக 150 வருடம் பழமைவாய்ந்த தேவாலய செட்!

விஜய் சேதுபதி படத்துக்காக 150 வருடம் பழமைவாய்ந்த தேவாலய செட்!
விஜய் சேதுபதி படத்துக்காக 150 வருடம் பழமைவாய்ந்த தேவாலய செட்!
Published on

விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்காக, 150 வருட பழமையான தேவாலய செட் அமைக்கப்பட இருக்கிறது. 

நடிகர் விஜய் சேதுபதி, தியாகராஜன் குமாரராஜா இயக்கும் சூப்பர் டீலக்ஸ், மணிகண்டன் இயக்கியுள்ள, கடைசி விவசாயி, அருண்குமார் இயக் கும் சிந்துபாத், சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன், தெலுங்கில் சைரா நரமசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துவருகிறார். மலையாளத்தில் மார்கோனி மத்தாயி என்ற படத்திலும் நடிக்கிறார். 

இதற்கிடையே அவர் நடிக்கும் படத்தை, அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார். இவர், இயக்குநர் ஜனநாதனிடம் பேரா ண்மை, புறம்போக்கு படங்களில் பணிபுரிந்தவர். படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். மகேஷ் முத் து சுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்கிறார். சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்.கே.அஜெய்குமார் இணை  தயாரிப்பு செய்கிறார்.  விஜய் சேதுபதி ஜோடியாக இரண்டு பேர் நடிக்கின்றனர். அவர்கள் யார் என்று முடிவாகவில்லை. மார்ச்-சில் படப்பிடிப்பு துவங்குகிறது. 

படத்துக்காக 150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் வடிவமைக்கப்பட இருக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த படத்தின் கதை, சர்வதேச அளவில் நடைபெறும் பிரச்னையை பேசுவதாக இருக்கும். மூ ணாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com