”கக்கனுக்கு முன்பு கைக்கட்டி நிற்பதை பெருமையாக நினைத்தவர் என் தந்தை”: கமல்ஹாசன்

”கக்கனுக்கு முன்பு கைக்கட்டி நிற்பதை பெருமையாக நினைத்தவர் என் தந்தை”: கமல்ஹாசன்
”கக்கனுக்கு முன்பு கைக்கட்டி நிற்பதை பெருமையாக நினைத்தவர் என் தந்தை”: கமல்ஹாசன்
Published on

”கக்கனுக்கு முன்பு கைக்கட்டி நிற்பதை பெருமையாக கருதியவர் என் தந்தை. எளிமையால் ஒரு தலைமுறையையே ஈர்த்த தேசப்பக்தர் கக்கன்” என்று மறைந்த காங்கிரஸ் தலைவர் கக்கன் பிறந்தநாளை நினைவு கூர்ந்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான கக்கனின் 114 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் அவரது பிறந்தநாளை நினைவுகூர்ந்து வரும் நிலையில், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”கக்கனுக்கு முன்பு கைகட்டி நிற்பதைப் பெருமையாகக் கருதியவர் என் தந்தை. அதிகாரத்தால் அல்ல எளிமையால் ஒரு தலைமுறையையே ஈர்த்த தேசபக்தர் கக்கன். ஒரொரு நாளும் நினைவுகூரத்தக்க ஆளுமையை அவரது பிறந்தநாளில் போற்றுவோம்” என்று நினைவு கூர்ந்துள்ளார்.

மறைந்த தலைவர் கக்கன் தமிழக காங்கிரஸ் கட்சியில் காமராஜருக்கு அடுத்தப்படியாக தமிழக மக்களால் விரும்பப்படுபவர். விவசாயத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com