சைக்கிள் செயின்.. கிரிக்கெட் பேட்.. - அமிதாப் பச்சனின் ‘ஜுந்த்’ டீசர் வெளியீடு

சைக்கிள் செயின்.. கிரிக்கெட் பேட்.. - அமிதாப் பச்சனின் ‘ஜுந்த்’ டீசர் வெளியீடு
சைக்கிள் செயின்.. கிரிக்கெட் பேட்.. - அமிதாப் பச்சனின் ‘ஜுந்த்’ டீசர் வெளியீடு
Published on

அமிதாப் பச்சன் நடிப்பில் நாக்ராஜ் மஞ்சுலே இயக்கும் ‘ஜுந்த்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மராத்தி மொழியில் ஃபாண்ட்ரி, சாய்ரத் படங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நாகராஜ் மஞ்சுலே. இந்தப் படங்கள் மூலம் இந்தியா முழுவதும் சினிமாவை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் இவர் அறியப்பட்டுள்ளார். தற்போது, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை வைத்து ‘ஜுந்த்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் நாகராஜ் மஞ்சுலே.

சமூக செயற்பாட்டாளரும், கல்லூரி பேராசிரியராக இருந்த விஜய் பார்ஸே என்பவரது வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் பார்ஸே ஏழை சிறுவர்களுக்கு கால்பந்தை ஊக்குவித்தவர்.

இந்நிலையில், ‘ஜுந்த்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசரில் சில இளைஞர்கள் கைகளில் சைக்கிள் செயின், கிரிக்கெட் பேட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஒவ்வொருவரும் வைத்துக் கொண்டு நடந்து செல்கிறார்கள். ஒரு நிமிடம் 12 நொடிகள் டீசர் உள்ளது. தொடக்கத்தில் அமிதாப் பச்சனின் குரலில், 'இது கூட்டம் இல்லை.. இது டீம்’ என்று சொல்கிறார். அமிதாப் முகம் டீசரில் காட்டப்படவில்லை. இளைஞர்களின் முகமும் பின்புறம் மட்டுமே காட்டப்படுகிறது.

இந்தப் படம் மே 8ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்ப்பதாக அபிஷேக் பச்சன் தன்னுடைய ட்விட்டரில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com