”எப்படி சொல்வதென்றே தெரியவில்லை" நடிகர் ராமர், நடிகை ஆர்த்தி உருக்கம்

”எப்படி சொல்வதென்றே தெரியவில்லை" நடிகர் ராமர், நடிகை ஆர்த்தி உருக்கம்
”எப்படி சொல்வதென்றே தெரியவில்லை"  நடிகர் ராமர், நடிகை ஆர்த்தி உருக்கம்
Published on

நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் காலமானார். அது இது எது?, கலக்கப்போவது யாரு? போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். தனி ஆளாக ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்விக்கும் திறன்கொண்டவரான அவர்,சில நாட்களாக இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வழியாக சின்னத்திரை ரசிகர்களின் இல்லங்களுக்கே சென்று நடிப்பால் ரசிக்கவைத்து, சிரிக்கவைத்தவர். நடிகர் வடிவேலுவின் உடல் மொழியுடன் தன் தனித்துவமான நடிப்புத்திறனால் பிரபலம் அடைந்தார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த வடிவேலு பாலாஜி மதுரையைச் சேர்ந்தவர்.

நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சென்னை வந்த அவருக்கு தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது. அதில் அது இது எது, கலக்க போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூலம் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியான வெளியான கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். 

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் இதயத்தில் பிரச்னை ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் வீடு திரும்பிய நிலையில், நேற்றைய தினம் மயக்கம் ஏற்பட்டு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வடிவேல் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காததால் வடிவேல் பாலாஜி காலமானார். அவரது மறைவுக்கு அவருடன் பணியாற்றிய நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

நடிகை ஆர்த்தி. " வடிவேல் பாலாஜிக்கு ரொம்ப நல்ல குணம். அவருக்கு உதவும் தன்மை இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்வது என்றே புரியவில்லை. அவர் இருக்கிற இடத்தை கலகலவென வைத்திருப்பார். நிறைய திறமைகள் மிக்கவர். அவருக்கு டான்ஸ் வரும் என்பதை நிரூபிப்பதற்காக அவ்வளவு கடுமையாக உழைப்பார்" கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

வடிவேல் பாலாஜியுடன் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சேர்ந்து நடித்துள்ள நடிகர் ராமர், " மிகப்பெரிய திறமைசாலி. எனக்கு எப்படி சொல்வதென்றே தெரியவில்லை" என்று வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com