”வீடுகளுக்கு வழங்கப்படும் கேன் வாட்டர் தரமானதா என்பதை தெரிந்துகொள்ள பயனாளர்களுக்கு எந்த வழியும் இல்லை. இதற்காக, அரசு ஒரு முக்கிய முடிவை எடுக்கவேண்டும்” என்று இயக்குநர் சேரன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சேரன்,
”சென்னை மற்றும் பெருநகரங்களில் வாழும் மக்களுக்கு குடி தண்ணீர் மற்றும் சமையலுக்கான தண்ணீர் பெரும்பாலும் கேன் வாட்டர் சப்ளை மூலமாகத்தான் விலைக்கு கிடைக்கிறது.. தினசரி பயன்பாட்டில் முக்கியமானதான தண்ணீரின் தரம் சோதிக்கப்பட்டு வழங்கப்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ள எந்த வழியும். பயன்பாட்டாளருக்கு இல்லை. சுத்தமான தண்ணீராக இல்லையெனில் அதுவே நோய் பரவுவதற்கான முதல் காரணமாக மாறும். அரசு இதற்கான ஒரு முக்கிய முடிவு எடுத்தால் முன்னேற்பாடாக இருக்கும். பரிசோதனையும் அரசு முத்திரையும் இருக்கும்படியான அனுமதி வாங்குதல் வழங்குதல் அவசியம்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.