விஜய்யின் 'பீஸ்ட்' முதல் நாள் வசூல் எவ்வளவு? முந்தைய சாதனைகளை முறியடித்ததா?

விஜய்யின் 'பீஸ்ட்' முதல் நாள் வசூல் எவ்வளவு? முந்தைய சாதனைகளை முறியடித்ததா?
விஜய்யின் 'பீஸ்ட்' முதல் நாள் வசூல் எவ்வளவு? முந்தைய சாதனைகளை முறியடித்ததா?
Published on

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் முதல் நாளில் 36 கோடியே 88 லட்சம் வசூல் செய்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் 13ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் சுமார் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டது. அதிலும் அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை அடுத்தடுத்த காட்சிகள் திரையிடப்பட்டன. இதன்மூலம் தமிழகத்தில் 36 கோடியே 88 லட்சம் ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர். அதில் செங்கல்பட்டு விநியோகஸ்த பகுதியில் அதிகப்பட்சமாக 10 கோடியே 28 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே ‘சர்கார்’ படம் தான் முதல் நாளில் 32 கோடியே 10 லட்சம் வசூல் செய்தது அதிக பட்சமாக இருந்தது. அந்த சாதனையை ‘பீஸ்ட்’ தற்போது முறியடித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com