“நானே கேட்டு வாங்கி ‘சண்டைக்கோழி’ படத்தில் நடித்தேன்” - விஷால் ஃப்ளாஷ்பேக்

“நானே கேட்டு வாங்கி ‘சண்டைக்கோழி’ படத்தில் நடித்தேன்” - விஷால் ஃப்ளாஷ்பேக்
“நானே கேட்டு வாங்கி ‘சண்டைக்கோழி’ படத்தில் நடித்தேன்” - விஷால் ஃப்ளாஷ்பேக்
Published on

‘சண்டைக்கோழி’ முதல் பாகம் எனக்காக எழுதப்பட்ட கதையல்ல என்று நடிகர் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

விஷால் நடித்து தயாரித்துள்ள ‘சண்டக்கோழி2’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஷால், “எனது 25படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ‘சண்டக்கோழி’ பாகம் ஒன்று எனக்காக எழுதப்பட்ட கதையல்ல. அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது. கதையைப் பற்றி கேள்விபட்டதும் லிங்குசாமிக்கு பேசினேன். அவர் எனது இருபது வருட நண்பர். அந்த உரிமையில் அந்தப் படத்தில் நான் நடிக்கின்றேன் என்று கூறினேன். 

அப்போது ‘செல்லமே’ படம் வெளிவரவில்லை. ‘சண்டக்கோழி’யில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார். அங்க தொடங்கியதுதான் என் வாழ்கை. கனல் கண்ணன் மாஸ்டர் அந்தப் படத்தில் கொடுத்த தைரியம் ஆக்ஷன் ஹீரோவாக என்னை வெளிப்படுத்தியது. ‘தாவணி போட்ட தீபாவளி’ பாடல் என்னை பட்டித்தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது. பிறமாநிலத்திலும் பந்தைய கோழி என்று வெளியிட்டார்கள்.

லிங்குசாமி நினைத்திருந்தால் பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்திருக்கலாம். என் அப்பா நினைத்திருந்தால் அப்படத்தை காப்பி ரைட்சுக்கு பல கோடிக்கு விற்பனை செய்திருக்கலாம். ஆனால் என் அப்பா என்னை தெலுங்கிலும் ஹீரோவாக நினைத்தார். அங்கு இரண்டு வாரத்திற்கு கூட்டம் இல்லை மூன்றாவது வாரத்திலிருந்து அலைமோத ஆரம்பித்தனர். அன்று முதல் 24படம் முடித்து 25வது படத்திற்காக உங்கள் முன்னால் நிற்கின்றேன்.அதுவும் ‘சண்டைகோழி’யே 25வது படமாக அமைந்ததுதான் எனக்கு சாதனையாக தோன்றுகிறது. 

கீர்த்தி சுரேஷின் மற்ற படங்களை பார்த்து இருக்கின்றேன். அவருடைய‘மகாநதி’ பார்த்தேன். அதை பார்த்து அவருக்கு தேசிய விருது கிடைக்கும்  எனக் கூறினேன். அவருடன் நடித்தது எனக்கு சந்தோசமாக உள்ளது. நான் படம் இயக்குவேனோ இல்லையோ? கட்டாயம் கீர்த்தி சுரேஷ் இயக்குநராக வளம் வருவார். வீட்டில் எங்க அப்பாவை எப்படி பார்த்தேனோ அதே போல் செட்டில் ராஜ்கிரண் சாரை பார்த்தேன். பிரபு, ராஜ்கிரண், இயக்குநர் பாலா உடன் நடிக்கும் போதும் அவ்வப்போது என்னை நானே கிள்ளி பார்ப்பேன். ‘சண்டக்கோழி2’, தெலுங்கு‘பந்தையம்கோழி-2’ இரண்டுமே அக்டோபர் 18ல் வெளியாக உள்ளது. அதுவும் ஆயுதபூஜை அன்று பெரிய அளவில் வெளிவரவுள்ளது. 2000 பிரிண்ட் போட்டு கோலாகலமான திருவிழா போன்று வெளிவரும். அனல் அரசு மாஸ்டர் மூலியமாக உடலில் 100 தையல் வந்து விட்டது” என்றார் விஷால்.


 
இயக்குநர் லிங்குசாமி:-

“நேற்று விஷால் இந்தப் படத்தை பார்த்து இதில் நடித்தவர்கள் எல்லாரும் அப்படியே உள்ளனர். பதிமூன்று வருடம் ஆனதுபோல் தெரியவில்லை என்றார். எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது. நான் முதல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போதே விஷாலை தெரியும். அவரை தம்பி, முதலாளி ,நண்பன் என எப்படி வேண்டுமானாலும் அழைப்பேன். ‘சண்டக்கோழி’ முதல் பாகம் நடித்த விஷாலை இரண்டாம் பாகத்திலும் உணர்ந்தேன். நான் சூர்யா,மாதவன்,அஜித் உள்ளிட்ட பலரிடம் வேலை செய்துள்ளேன். கீர்த்தி சுரேஷுடன் வேலை பார்த்தது சாவித்திரியுடன் வேலை பார்த்தது போல இருந்தது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இசையமைத்த ‘இருப்புத்திரை’யும் அவர் தயாரித்த படமும் பெரிய வெற்றியை தந்தது. மதன் கார்கி எழுதிய பாடலுக்கு மூன்று நிமிடத்தில் இசையமைத்து கொடுத்தார். பாடல் அருமையாக வந்துள்ளது”என்றார். 
 

கீர்த்தி சுரேஷ் :-

“இந்தக் கதை கேட்கும் போது ரொம்ப டென்ஷனாக இருந்தேன். மீரா ஜாஸ்மீன் மேடம் பற்றி எல்லாருக்கும் தெரியும். அவர்‘சண்டைகோழி’முதல் பாகத்தில் எப்படி நடித்திருப்பார் என்று. அதை நான் எப்படி செய்ய போகிறேன் என்ற பயம் இருந்தது. அந்தக் கதாப்பாத்திரம் கேட்டபின் அதற்கு நிகராக நடிக்க வேண்டும் எனத் தோன்றியது. ‘மகாநதி’ படபிடிப்பின் போதும் இந்தப் படம்தான் எனக்கு பெரிய ரிலாக்ஸ் ஆக இருந்தது” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com