விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை பதிவு செய்துள்ள ‘மேதகு’ திரைப்படம் இன்று ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் விதமாக கதை, திரைக்கதை, வசனம் அமைத்து ‘மேதகு’ படத்தை இயக்கியுள்ளார், இயக்குநர் கிட்டு. இன்று BS Value ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள, இப்படத்தை பார்க்கச்சொல்லி ஆதரவு தெரிவித்துள்ளனர் திரைத்துறையினர். இயக்குநர் வெற்றிமாறன், சத்யராஜ், சசிக்குமார், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் உள்ளிட்டோர் தனியாக வீடியோ வெளியிட்டும் ட்விட்டரில் பதிவிட்டும் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளனர்.
இயக்குநர் சசிக்குமார், அவரது ட்விட்டர் பக்கத்தில், “ஈழத்தின் போராட்டத்தையும் அர்ப்பணிப்பையும் உலகுக்கு உரக்கச் சொல்லும் படமாக ’மேதகு’ படம் உருவாகி இருக்கிறது. ஈழத்தின் மீதான உலகளாவிய நற்பார்வை பெருக இந்தப் படம் மகத்தான வெற்றி பெற வேண்டும். வெல்வோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் ” முப்படை கட்டி ஆண்ட ஒப்பற்ற தமிழரினத்தின் பெருமை மாவீரர் தலைவர் ’மேதகு’ பிரபாகரன் அவர்களின் வரலாற்றை ஒட்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்” எனது தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிக்கிறார்.