இன்று பெண்கள் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். காரணம் வளரும் பெண் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதாலேயே தங்க நகைகளில் முதலீடு செய்துவருகின்றனர். அத்துடன், தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் நடப்பு டிசம்பர் மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை உயர்வு கடுமையாக உயர்ந்திருப்பது அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.2) கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,915க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.47,320க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.51,080க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை உயர்ந்திருக்கும் அதேநேரத்தில், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.83.50க்கும், 1 கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.83,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவதற்கு இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, உள்நாட்டிலும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, திருமண மற்றும் விசேஷ காலம் ஆகியவையே தங்கம் இந்தியாவில் விலை உயர்வதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
’அடுத்த பெண்ணைப் பார்ப்பியா..’ - அமெரிக்காவில் காதலனின் கண்ணில் ஊசியால் குத்திய காதலி!