'மிகத் துணிச்சலான சீர்திருத்தங்கள் தேவை' -இந்திய பொருளாதாரம் குறித்து பேசிய ரகுராம் ராஜன்

'மிகத் துணிச்சலான சீர்திருத்தங்கள் தேவை' -இந்திய பொருளாதாரம் குறித்து பேசிய ரகுராம் ராஜன்
'மிகத் துணிச்சலான சீர்திருத்தங்கள் தேவை'  -இந்திய பொருளாதாரம் குறித்து பேசிய ரகுராம் ராஜன்
Published on


கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு அடிமட்ட அளவில் மிகவும் துணிச்சலான சீர்த்திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், லிங்க்டுஇன் வலைதளத்தில் நடந்த உரையாடலில் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், “ரிசர்வ் வங்கியின் பேலன்ஸ்ஷீட்டை விரிவுபடுத்துவதற்கான இடம் "எல்லையற்றது" அல்ல. பணவீக்கத்தைக் கண்காணிப்பதில் ரிசர்வ் வங்கி அதிகம் கவனம் செலுத்தவேண்டும். துணிச்சலான சீர்திருத்தங்கள் மூலம் மிருக பலத்தைப்போன்ற உத்வேகம் உருவாக்கப்படவேண்டும். வேளாண் துறையில் அறிவிக்கப்பட்ட சில சாத்தியங்களைப் பார்க்கமுடிகிறது. ஆனால் அதைவிட அதிகமாக நமக்குத் தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அடுத்த சில ஆண்டுகளில் செய்தால், வெறும் பேச்சாக அல்லாமல், உண்மையிலேயே அடிமட்ட அளவில் செயல்படுத்தினால் நமக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன” என்று நம்பிக்கை அளிக்கும் ரகுராம் ராஜன், "நாம் பேசிக்கொண்டே சிறிய அளவில் செயல்களைத் தொடர்ந்தால், நாம் நழுவிவிடுவோம் என்றே நினைக்கிறேன், மெதுவான வளர்ச்சியின் விளைவுகளைக் கண்டு பயப்படுகிறேன்.  இன்று நமக்கு வலிமையான, நீடித்த, புத்திசாலித்தனமான நடவடிக்கையே தேவைப்படுகிறது” என்றும் எச்சரிக்கிறார்.  

தற்போது ரகுராம்ராஜன், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com