இந்திய சட்ட திட்டங்களுக்குட்பட்டே தாங்கள் நடந்து கொண்டதாக சியோமி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பிரபலமான மொபைல் ஃபோன் உற்பத்தி நிறுவனமான சியோமியின் 5 ஆயிரத்து 551 கோடி ரூபாய் சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவிற்கு சியோமி பணம் அனுப்பும் போது இந்திய வங்கிகளுக்கு தவறான தகவல்களை தந்ததாகவும், இது அன்னியச் செலாவணி சட்ட விதிமீறல் என்றும் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது, தங்கள் மீதான நடவடிக்கை குறித்து சியோமி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்திய சட்ட திட்டங்களை அனுசரித்தே தங்கள் நிறுவனம் நடந்துகொண்டதாக கூறியுள்ளது. மேலும் ராயல்டி கட்டணங்களை நேர்மையாக செலுத்தியதாகவும், வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் சீன நிறுவனமான சியோமி கூறியுள்ளது. இந்திய சந்தைகளில் கடந்த 8 ஆண்டுகளாக இருந்து வரும் சியோமி மொபைல் ஃபோன்கள் சந்தையில் 20 சதவிகித பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காதியின் புதிய சாதனை - இத்தனை கோடிகளில் வியாபாரமா?