எஜுடெக் பிரிவில் செயல்பட்டுவரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் அன் அகாடமி 1000 பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
எஜுடெக் பிரிவில் செயல்பட்டுவரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் அன் அகாடமி 1000 பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. செலவுகளை குறைப்பதற்காக பணியாளர்களை நீக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மொத்த பணியாளர்களில் 10 சதவீதத்துக்கு மேல் நீக்கி இருக்கிறது. நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், ஆசிரியர்கள் என பலரையும் நீக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 44 கோடி டாலர் அளவுக்கு நிதி ( 3.4 பில்லியன் டாலர் சந்தை மதிப்பில்) திரட்டியது. ஆனால் அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே பணி நீக்கம் செய்திருக்கிறது.
பைஜூஸ்க்கு பிறகு அடுத்த பெரிய எஜுடெக் நிறுவனம் அன் அகாடமி ஆகும். டைகர் குளோபல், ஜெனரல் அட்லாண்டிக், மிரே அசெட் உள்ளிட்ட பல முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.