"இந்திய சந்தையில் சரிவு கண்ட இருசக்கர வாகன விற்பனை" - FADA தகவல்!

"இந்திய சந்தையில் சரிவு கண்ட இருசக்கர வாகன விற்பனை" - FADA தகவல்!
"இந்திய சந்தையில் சரிவு கண்ட இருசக்கர வாகன விற்பனை" - FADA தகவல்!
Published on

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) இந்தியாவில் கடந்த நவம்பர் மாதத்திற்கான இருசக்கர வாகன விற்பனை தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய சந்தையில் தொடர்ச்சியாக இருசக்கர வாகன விற்பனை சரிவு கண்டுள்ளது தெரியவந்துள்ளது. 

கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 14,33,855 யூனிட்கள் மட்டுமே சில்லறை வர்த்தகத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது FADA. 2019 நவம்பரில் 17,98,897 யூனிட்களும்,  2020 நவம்பரில் 14,44,762 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

ஹீரோ நிறுவனம் 5,30,997 வாகனங்களை நவம்பரில் விற்பனை செய்துள்ளது. ஹோண்டா 3,66,340 யூனிட்களும், டிவிஎஸ் 2,13,274 யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன. பஜாஜ், சுஸுகி, யமஹா, என்ஃபீல்ட், ஹீரோ எலக்ட்ரிக், Okinawa, Piaggio, ஜாவா, Ather, Ampere, Pure EV மாதிரியான நிறுவனங்கள் இதில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

எரிபொருளில் இயங்கும் இருசக்கர வாகன விற்பனையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது டிவிஎஸ் மற்றும் பஜாஜ் மட்டுமே விற்பனையில் எழுச்சிக் கண்டுள்ளது. மறுபக்கம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் அதீத வளர்ச்சியை சந்தித்துள்ளன என FADA தகவல்.  

இருசக்கர வாகன விற்பனை சரிய காரணம் அதிகரித்து வரும் பெட்ரோல் கட்டணம் என சொல்லப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com