டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டு நிறுவனங்கள் தங்கள் பைக்குகள் விலையை குறைப்பதாக தெரிவித்துள்ளன.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தங்கள் தயாரிப்புகளுக்கு ஆயிரத்து 600 ரூபாய் முதல் 2 300 ரூபாய் வரை குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் விலைக் குறைப்பின் அளவை வெளியடவில்லை. பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே 4500 ரூபாய் வரை விலைக் குறைப்பை அறிவித்திருந்தது. ஃபோர்டு, ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஆகிய கார் நிறுவனங்களும் 10 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை விலைக்குறைப்பை அறிவித்துள்ளன. ஜூலை முதல் ஜிஎஸ்டி அமலாக உள்ள நிலையில் அதில் வாகனங்களுக்கு குறைவான வரிவிதிக்கப்பட்டிருப்பதால் அதன் பலனை நிறுவனங்கள் மக்களுக்கு தரத் தொடங்கியுள்ளன.