மின்னணு கழிவுப் பொருட்களிலிருந்து தங்கம் உள்ளிட்ட மதிப்புள்ள உலோகங்களை பிரித்தெடுக்கும் முறையை பிரிட்டன் நாணய சாலை அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்னணு பொருட்களை மின்சாரத்தை எளிதாக கடத்துவதற்காக தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் மிகச் சிறிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மின்னணு பொருட்கள் கைவிடப்படும்போது இந்த உலோகங்கள் பிரித்தெடுக்கப்படாமல் மறுசுழற்சி செயப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் மின்னணு கழிவுகளிலிருந்து தங்கம் உள்ள விலை மதிப்புள்ள உலோகன்களை பிரித்து எடுப்பதற்கான புதிய தொழிற்சாலையை கனடா நாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பிரிட்டன் நாணயசாலை அமைத்துள்ளது. உலகில் மொத்த தங்கத்தில் சுமார் 7% தங்கம் மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்தி: 'இந்த சமூக வலைதளங்கெல்லாம் ஆபத்து' தடை விதித்தது ரஷ்ய நீதிமன்றம்!