உலகின் பணக்கார நாடு: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது சீனா!
அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் பணக்கார நாடாக சீனா திகழ்வதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக சீன தேசத்தின் செல்வ வளம் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சியை பெற்றதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்கின்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. உலகளவில் 60 சதவிகித வருமானத்தை தன்னகத்தே தாங்கி நிற்கும் 10 நாடுகளின் பேலன்ஸ் ஷீட்டை ஆய்வு செய்த பிறகு இதனை தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.
கடந்த 2000 -மாவது ஆண்டு வாக்கில் 7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த சீனாவின் பொருளாதார நிகர மதிப்பு 2020-இல் 514 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது என இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிக்கோ மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தான் உலகளவில் 60 சதவிகித வருமானத்தை ஈட்டி வரும் நாடுகள்.